கத்தார் போறீங்களா ? இனி விசா தேவையில்லை…பயணிகளுக்கு அதிரடி சலுகை..

 
Published : Aug 10, 2017, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
கத்தார் போறீங்களா ? இனி விசா தேவையில்லை…பயணிகளுக்கு அதிரடி சலுகை..

சுருக்கம்

no visa to kathar for india. america and other 80 country

 

இந்தியா உட்பட 80 நாடுகளின்  பயணிகள்  விசா இல்லாமல் கத்தாருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று  அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 80  நாடுகள் இந்த பட்டியலில்  இடம்பெற்று உள்ளன .  

கத்தார் நாட்டுக்கு வரவிரும்பும்  குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த குடிமக்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை என்றும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதி செய்து, பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் கத்தார் ஏர்வேஸ் தோகாவில் உள்ள 5 மற்றும் 4  நட்சத்திர ஓட்டல்களில் இலவசமாக தங்கும் வசதியுடன் கொண்ட சிறப்பு சலுகையை கத்தார் அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது விசா தொடர்பான நகர்வு அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி அமலுக்கு வந்துள்ளது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு ரூ.3 லட்சம்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!