ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசாவை ஆரம்பித்து புது கரன்சியையும் அறிமுகப்படுத்த உள்ளதாக நித்யானந்தா கூறியிருக்கிறார்.
ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசாவை ஆரம்பித்து புது கரன்சியையும் அறிமுகப்படுத்த உள்ளதாக நித்யானந்தா கூறியிருக்கிறார்.
இந்தியாவில் வழக்குகள் உள்ளதாலும், ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டை விட்டு வெளியேறினார் நித்யானந்தா. அவர் எங்கிருக்கிறார் என போலீஸார் தேடி அலைந்த நிலையில், இண்டர்போல் போலீஸாரும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி விட்டதாகவும், வங்கி, யுனிவர்சிட்டி என பல வகை கட்டுமானங்களை உருவாக்கி விட்டதாக தெறிக்க விட்டார் நித்யானந்தா.
கைலாசத்திற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். 20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும் நித்தியானந்தா கூறியிருந்தார்.
ஆனால் கொரோனா பரவி தொடங்கியதில் இருந்து, நித்தியானந்தா பெரிதாக கண்டுகொள்ளபடவில்லை. இந்நிலையில் தற்போது கைலாசா குறித்த தகவலை வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா, கைலாசா நாட்டின் பணம் குறித்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார்.
வாடிகன் வங்கியை மையமாக கொண்டு ரிசர்வ் ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா உருவாகி உள்ளது எனவும், உள்நாட்டுக்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 300 பக்க பொருளாதார கொள்கை தயாராக உள்ளதாகவும் நித்தியானந்தா கூறியுள்ளார். இந்த கைலாசா நாட்டில் அவரது முதன்மை சீடர் நித்யானந்தமயி என்றழைக்ககூடிய ரஞ்சிதாவுக்கு முக்கியப்பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.