ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவ இருப்பதாகவும் ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாகவும் நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவ இருப்பதாகவும் ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாகவும் நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது, மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவு வைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போர் 6 வாரங்களுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது. இரு நாட்டுக்கும் இடையே போர் நீடித்து வரும் சுழலில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தியதால், ரஷ்ய படைகள் பல்வேறு நகரங்களில் இருந்து பின் வாங்கியுள்ளன. ஆனால் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பல்வேறு நகரங்கள் உருகுலைந்து போயுள்ளன. ரஷ்வாவின் ஈவு இரக்கமற்ற தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மாற்றாக உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ டாங்குககளை நிறுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்மாடோஸ், செர்னிகிவ், மக்கோரியு பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. நேட்டோ நாடுகள் வழங்கிய கூடுதல் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கூடுதல் தைரியத்தை தந்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் உதவும் வகையில், ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்க இருப்பதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி, C-130 ஹெர்குலஸ் விமானத்தில் ராணுவ உபகரணங்களுடன், 58 வீரர்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாவல் நியூசிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பீனி ஹெனேர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகையிலும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் அந்நாட்டிற்கு உதவும் நோக்கிலும் கூடுதலாக 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.