ரயிலில் துப்பாக்கிச் சூடு... ஒருவர் பலி... பலர் படுகாயம்...!

By vinoth kumar  |  First Published Mar 18, 2019, 6:07 PM IST

நெதர்லாந்தில் டிராம் ரயிலில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


நெதர்லாந்தில் டிராம் ரயிலில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை பலர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தவர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரெண்டன் டாரன்ட்(28) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Latest Videos

 

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் நகரில் நூற்றுக்கணக்கான பயணிகளோடு இன்று காலை சென்று கொண்டிருந்த டிராம் ரயிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதை தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர். இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, உட்ரெக்ட் நகரில் உள்ள மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உட்ரெச்ட் நகர் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வெளியேற வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

click me!