#UnmaskingChina: சீனா முகத்தில் கரிபூசிய நேபாள கம்யூனிஸ்டுகள்...!! இந்தியாவுக்கு பெருகுகிறது ஆதரவு...!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 8, 2020, 8:05 PM IST

ஆனால் அதில் இதுவரை பலன் இல்லை.  எனவே நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு ஒற்றுமையாக இருக்கவே சீனா விரும்புவதாக ஹவோ யாங்கி தெரிவித்துள்ளார். 


நேபாள பிரதமர் கே.பி ஷர்மா  ஒலியின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் 45 உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் அது மீண்டும் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஷர்மா ஓலிக்கு எதிராக குரல் எழுப்பி வரும் பிரசாந்தா தலைமையிலான குழுவை சமாதானம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக ஓலி தரப்பினர் கருதுகின்றனர். ஆனால் ஓலியை பதவிநீக்கம் செய்தே ஆகவேண்டும் என்பதில் பிரசாந்தா தலைமையிலான கோஷ்டியினர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேபாளத்தில் பிரதமர், கே.பி ஷர்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சித் தலைவராகவும்  இருந்து வருகிறார். இந்நிலையில் கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையிலான இன்னொரு கோஷ்டியினர் பிரதமர் ஷர்மா ஓலி ஆட்சிக்கு வந்தது முதல் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை, அவரின் சமீபத்திய நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஒருதலைப்பட்சமாக நடத்தினார், என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்மீது வைத்துள்ளதுடன், அவன் உடனே பதவி விலகவேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

அத்துடன் இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், லிம்பியதூரா, கலபானி,  ஆகிய பகுதிகளை அவர் உரிமை கொண்டாடி வருவதும், இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளை கூறி வருவதும் ஏற்புடையதல்ல எனவும்  பிரசாந்தா தலைமையிலான கோஷ்டியினர் ஷர்மா ஓலி மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி வாய்ந்த 45  உறுப்பினர்கள் கொண்ட நிலை குழுவிலும் பெரும்பாலானோர் ஓலிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். ஷர்மா ஓலி ஒருவருக்கு ஒரு பதிவி என்ற தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக, இரு பதவிகளை வகித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே சர்மா ஓலி பதவி விலகியே ஆகவேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவரோ பதிவி விலக மறுத்துவருகிறார். எனவே அவரின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்வதற்கான கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை குழு கூட்டம் கடந்த சில  தினங்களுக்கு முன்னரே கூட இருந்த நிலையில் அது இதுவரை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஷர்மா ஓலி பிரதமராக நீடிக்க வேண்டுமென சீனா விரும்புவதால்,  நேபாள நாட்டிற்கான சீனத் தூதர் ஹவோ யாங்கி  ஷர்மா ஓலிக்கு  ஆதரவாக நேபாள  மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் சர்மா ஓலிமீது அதிருப்தியில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சமாதானம் செய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் அதில் இதுவரை பலன் இல்லை.  எனவே நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு ஒற்றுமையாக இருக்கவே சீனா விரும்புவதாக ஹவோ யாங்கி தெரிவித்துள்ளார். மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மாதவ் குமார்  மற்றும் ஜலநாத் கானால் ஆகியோரின் ஆதரவுடன் பிரச்சந்தா பிரிவு  ஓலி பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறது. மேலும் ஓலியின் சமீபத்திய இந்திய விரோத கருத்துக்கள் "அரசியல் ரீதியாக சரியானவை அல்ல, இராஜதந்திர ரீதியில் பொருத்தமானவை அல்ல" என்பதிலும் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் ஓலி மற்றும் பிரசாந்தா ஆகியோர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது ஓலி தனது கட்சிப் பதவி மற்றும் பிரதமர் பதவியை கைவிட மறுத்துவிட்டார்.  எனவே (இன்று) புதன்கிழமை நிலைக்குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சக்திவாய்ந்த 44 நிலைக்குழு உறுப்பினர்களை ஷர்மா ஓலி இன்று எதிர்கொள்ள தயாராக இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கூட்டம்  மீண்டும் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கட்சியில் பிளவு ஏற்பட்டால் தனது அரசாங்கத்தை காப்பாற்ற தனது ஆதரவைத் எதிர்நோக்கி காத்திருக்கும் நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தியூபாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஷர்மா ஓலி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

இந்நிலையில் சிபிஎன்-யுஎம்எல் மற்றும் மாவோயிஸ்ட் மையத்திற்கு இடையிலான ஒருங்கிணைப்பு செயல்முறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதிலிருந்து, கட்சியில் ஒரு நபர் ஒரு பதவியின் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்திவருகின்றனர் என நிலைக்குழு உறுப்பினர் கணேஷ் ஷா தெரிவித்துள்ளார். திரு. ஓலி இரண்டு நிர்வாக பதவிகளில் ஒன்றை தியாகம் செய்தால் மட்டுமே கட்சி ஒன்று பட்டிருக்கும் இல்லை என்றால் பிளவுபடுவது உறுதி என கூறியுள்ளார். 
 

click me!