அது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..!! அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2020, 1:27 PM IST
Highlights

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருத்து விரைவில் கண்டுபிடிக்காவிட்டால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டில் தினமும்  2.86 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்படக்கூடும் என மசாசூசெட்ஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) எச்சரித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருத்து விரைவில் கண்டுபிடிக்காவிட்டால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டில் தினமும்  2.86 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்படக்கூடும் என மசாசூசெட்ஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) எச்சரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட அதிக மக்கள்தொகை நிறைந்த 84 நாடுகளில் அதாவது உலக மக்கள் தொகையில் 60%  பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் இன் ஆராய்ச்சியாளர்கள் ஹஷீர் ரஹ்மந்தாத், டி.ஒய் லிம் மற்றும் ஜான் ஸ்டெர்மன் ஆகிய நோய்த்தொற்று ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் 2021- ம் ஆண்டு மே மாதத்தில் உலக மக்கள் தொகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 முதல் 60 கோடிக்குள் இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.
இந்த சமயத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில்  95 ஆயிரம் பேரும், தென்ஆப்பிரிக்காவில் 21,000 பேரும், ஈரானில் 17 ஆயிரம் பேரும், இந்தோனேசியாவில் 13 ஆயிரம் பேரும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் உலகிலேயே அதிகம் பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நோய்த் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரசுக்கு பிரத்யேக சிகிச்சை இல்லாத நிலையில் உலக அளவில் 2021 மார்ச் முதல் மே மாதத்திற்குள் சுமார் 20 கோடி முதல் 60 கோடி வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக ஆபத்து நிறைந்த நாடாக கருதப்படும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மிக கடுமையான பொருளாதார சவால்களை எதிர் கொள்ள வாய்ப்புள்ளது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போதுவரை உலக அளவில் 1.16 கோடி பெருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்,இதன் எண்ணிக்கை இன்னும் ஆறு மாதங்களில் 24 கோடியாக அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இறப்பு சதவீதம் 18 லட்சமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுவரை இந்த வைரசுக்கு பிரத்யேக தடுப்பு ஊசி கண்டுபிடிக்காத நிலையில் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை இந்தியா கண்டிராத வரலாறு காணாத  அளவிற்கான பாதிப்பாக அது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதனால்தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்ஸின் தடுப்பு மருந்து ஆராய்ச்சி அதி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட்-15ஆம் தேதிக்குள் இந்த மருந்து குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

 

click me!