கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரச்சாரம் செய்த பிரேசில் அதிபருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரச்சாரம் செய்த பிரேசில் அதிபருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கொரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 18 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கே இதுவரை 16.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 66 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல பிரேசில் அதிபர் ஆரம்பம் முதலே பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டாம் என பல பிரசாரங்கள் செய்து வந்தார். பொதுவெளியில் அவரும் மாஸ்க் அணியாமல் தான் சுற்றி வந்தார். அவர் மாஸ்க் அணியாமல் வெளியே வருவதால் நாள்தோறும் 390 டாலர் அபராதம் கட்ட வேண்டும் என பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கொரோனா பாதிப்பை விட பொருளாதார பாதிப்பு தான் கஷ்டம் என்பதால் மக்கள் சமூக விலகல், மாஸ்க் அணியாமல் சுகந்திரமாக சுற்றலாம் என அவர் பலமுறை கூறிவந்துள்ளார். மேலும், தான் ஒரு தடகள வீரர் என்பதால் தன்னை வைரஸில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த திங்களன்று போல்சோனாரோவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மாஸ்கை கழட்டியதோடு, நான் நலமாக இருக்கிறேன். என் முகத்தை பாருங்கள். இங்கே நடந்து வாக்கிங் கூட செல்வேன். ஆனால் மருத்துவ காரணங்களால் செல்லவில்லை. என்று பேசியுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.