இம்ரான்கானுக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தை.!! அமெரிக்காவுக்கு கடிதம் என மிரட்டும் நவாஸ் ஆதரவாளர்கள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 3, 2020, 4:23 PM IST

லண்டனில்  மருத்துவமனையில் சேரப்போவதாக  கூறிய அவர்,   அங்குள்ள ஒரு உணவகத்தில் உறவினர்களுடன் உணவு அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது .  இதனையடுத்து அவருக்கு ஜாமீனை நீட்டிக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் மறுத்துவிட்டது . 


நவாஸ் ஷெரீப்பை நாடு  நடத்தும்படி இங்கிலாந்து அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுத முடிவு செய்துள்ளது .  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது ஊழல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது .  அல் அஜீஸியா மில்ஸ் எனும் ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது .  இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்  அவருக்கு இங்கிலாந்தில் சிகிச்சை வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கூறப்பட்டது .  அதை ஏற்றுக்கொண்ட  இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது . மற்றொரு வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது .  இந்நிலையில்  கடந்த நவம்பர் மாதம் நவாஸ் ஷெரீப்  சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

 

Latest Videos

லண்டனில்  மருத்துவமனையில் சேரப்போவதாக  கூறிய அவர்,   அங்குள்ள ஒரு உணவகத்தில் உறவினர்களுடன் உணவு அருந்துவது போன்ற  புகைப்படம் ஒன்று வெளியானது .  இதனையடுத்து அவருக்கு ஜாமீனை நீட்டிக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் மறுத்துவிட்டது .  அவர் ஜாமீன் கோர மருத்துவ ரீதியான எந்த காரணமும் இல்லாததால் அவருடைய ஜாமீனை நீட்டிக்க முடியாது எனவும் அவரை உடனே பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என  கடிதம் எழுதவும் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது . இதுகுறித்து  பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் கூறியதாவது :- நவாஸ் ஷெரிப்பின்  உடல்நிலை காரணமாக அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது .  ஆனால் அதை அவர் முறையாக பயன்படுத்தவில்லை .  மருத்துவமனையிலும் இதுவரையில் அவர் சேரவில்லை . எனவே அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுத கொள்கை அளவில் முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார் .

 

இந்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில் ,  நவாஸ் ஷெரிப் குறித்து இம்ரான்கான் இங்கிலாந்துக்கு  கடிதம் எழுதினால்,  இம்ரான் கானுக்கு சட்டவிரோதமாக பிறந்தகுழந்தை தொடர்பான வழக்கை மீண்டும் தோண்டி எடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு நாங்கள் கடிதம்  எழுதுவோம் .  நவாஸ் ஷெரிப் இதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார் .  அவருக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது .  நவாஸ் ஷரீபின் உடல்நிலையில் விளையாடாமல் தேச நலனில் இம்ரான்கான் அக்கறை செலுத்த வேண்டுமென காட்டமாக கூறியுள்ளார்.  
 

click me!