குறிப்பாக தென்கொரியாவுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் ஐஸ்லாந்து போர்ச்சுக்கல் , ஜோர்டான் , துனிசியா, அர்மோனியா, லாட்ஸ்வியா , செனகல், உள்ளிட்ட 7 நாடுகளில் நேற்று முதல் புதிதாக கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது .
சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது . அதுமட்டுமல்லாது இதுவரை மனித சமூகம் கண்டிராத கொடிய வகை வைரஸாக இது உள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசூஸ் தெரிவித்துள்ளார் . கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மகாணத்தின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவி உள்ளது . இதில் சீனாவில் மட்டும் 2800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் சீனாவை கடந்து சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது . உலக அளவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஈரான் , தென்கொரியா , இத்தாலி , ஜப்பான் , அமெரிக்கா , ஆஸ்திரேலியா , உள்ளிட்ட நாடுகளில் மட்டும் 81 சதவீதம் பேர் உள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் சீனாவை விட மற்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி உள்ளது . கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அளவிற்கு வேகமாக பரவுவதால் , உலக அளவில் கோரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் தென்கொரியா , இத்தாலி , ஈரான் ஜப்பான் , ஆகிய நாடுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது . இதனால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது .
சீனாவை விட மற்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன . குறிப்பாக தென்கொரியாவுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் ஐஸ்லாந்து போர்ச்சுக்கல் , ஜோர்டான் , துனிசியா, அர்மோனியா, லாட்ஸ்வியா , செனகல், உள்ளிட்ட 7 நாடுகளில் நேற்று முதல் புதிதாக கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது . இதற்கு முன்னர் இந்த வைரஸை நாம் எதிர் கொள்ளாததால் தற்போது உலக அளவில் பரவி வரும் இந்த வைரஸின் நெருக்கடியை சமாளிப்பது கையாள்வது மிக சிரமமாக உள்ளது . ஆனாலும் இந்த வைரஸை கண்டு நாம் அஞ்சி ஒதுங்கக் கூடாது . அதற்கு எதிராக செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை வீழ்த்த முடியும் என கூறியுள்ளார் .