அடி துள்...செவ்வாய் கிரகத்தில் இடம் பிடிக்க வேண்டுமா... உடனே இதை செய்யுங்க... நாசா புதிய வாய்ப்பு...!!

By Ezhilarasan Babu  |  First Published Sep 29, 2019, 5:39 PM IST

https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற முகவரியில் கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும்  நாசா தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு முன் இந்த முகவரியில் பதிவு செய்யலாம்


செவ்வாய்கிரகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. 

Latest Videos

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சமீபகாலமாக விண்வெளி ஆராய்ச்சியில்  உலக நாடுகள் அதீத கவனம் செலுத்து வருகிறன, குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா இந்தியா போன்ற நாடுகள் அதில் முன்னிலை வகிக்கின்றன. அதற்காக பெரும் தொகையை செலவழித்து விண்வெளியில்  ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன இந்நிலையில்  விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில்  செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய2020 என்ற செயற்கைக்கோள் அடுத்த ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் அது2021 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு   சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆராயும் 2020 செயற்கைக்கோளில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்படும் என்றும் அதில் உலகெங்கிலுமுள்ள மக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் முடியும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே பெயர்களை பதிவு செய்ய விரும்புவோர், https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற முகவரியில் கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும்  நாசா தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு முன் இந்த முகவரியில் பதிவு செய்யலாம் எனவும், இதுவரை உலகெங்கிலும் சுமார் 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!