நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக மக்களின் முயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
சுமார் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனால், மலைப் பிரதேசங்கள் பலவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 38 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காணாமல் போன 30 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.