பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்திருப்பதாக பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்:
இதுக்குறித்து தனியார் ஊடக சேனலிடம் பேசிய பிரதமர் இம்ரான் கான், சுதந்திரமான மற்றும் ஜனநாயக பாகிஸ்தானுக்கான தனது போராட்டத்தை தொடரப்போவதாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ராணுவம் எனக்கு மூன்று வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம், விரைவில் தேர்தல், பதவியிலிருந்து ராஜினாமா ஆகிய வாய்ப்புகள் என் முன் இருக்கின்றன.அந்நிய சக்திகளுடன் சேர்ந்துக்கொண்டு எதிர்கட்சிகளும் என்னை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். என்னை மட்டுமல்லாமல் என் மனைவியையும் கொல்ல திட்டமிடுகின்றனர். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை நாட்டு மக்களிடையே சொல்ல விரும்புகிறேன் என்று அவர் பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் உங்களுக்கு என்ன சந்தர்பங்கள் கொடுத்துள்ளன என்ற கேள்விக்கு பதலளித்த இம்ரான் கான், எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் போன்றவர்களுடன் நான் பேசவேண்டும் என்று நினைக்கவில்லை. மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றாலும் கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சி சேர்ந்த கட்சிகளுடன் இணைந்து இனி பணியாற்ற முடியாது என்றார்.பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தான் சிறந்த வழி என்றும் என் தேசம் எனக்கு மீண்டும் ஆட்சி புரிய தனிப்பெரும்பான்மை அளிக்க வலியுறுத்துவேன் என்றும் தெரிவித்தார். இதானல் எந்த சூழ்நிலையும் எதற்காவும் யாருடனும் சமரசம் செய்து கொள்ள முடியாமல் பனியாற்ற முடியும் என்று திட்டவட்டமாக கூறினார்.
வெளிநாட்டு சதி:
மேலும் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் சதி இருப்பதாக கூறிய கான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இது பற்றி தனக்கு தெரியும் என்றும், சில எதிர்க்கட்சி தலைவர்கள் தூதரங்களுக்கு சென்று வந்ததாக தகவல் வந்தது என்றும் குற்றச்சாட்டினார்.ஹுசைன் ஹக்கானி போன்ற தலைவர்வர்கள் லண்டனின் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துக் கொண்டிருந்தனர் என்றார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி மக்களிடையே உரையாற்றிய கான், ஒரு வெளிநாடு என்னை பிரதமர் பதவிலிருந்து அகற்ற வேண்டும் என்று விரும்புகிறது.
மேலும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அவரை வெளியேற்ற வேண்டும் என்று சதி வேலை செய்கிறது. எனது சுதந்திரமான வெளிநாட்டு கொள்கைக்கு அந்த நாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று பகிரங்கமாக பேசினார். மேலும் எனக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்திலும், ஆட்சி மாற்றத்தை மட்டும் கோரவில்லை. பிரதமரும் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார்.
பிரதமரை கொல்லை சதி திட்டம்..?
முன்னதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, பிரதமர் கானைக் கொல்வதற்கு சதி திட்டம் நடப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு ஏஜென்ஸிகள் தகவல் தெரிவித்ததாக அவர் பேட்டியளித்தார். இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதுக்குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவர் பைசல் வாவ்டா, "நாட்டை விற்க மறுத்ததன் காரணமாக கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்படுவதாகக் கூறினார். மேலும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், குண்டு துளைக்காத மேடையை அமைக்கும் படி பலமுறை வலியுறுத்தியும் அவர் மறுத்துவிட்டதாக பைசல் வாவ்டா தெரிவித்துள்ளார்.
நாளை வாக்கெடுப்பு:
முன்னதாக, கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இம்ரான் கானின் கூட்டணி வைத்திருந்த முக்கிய கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சி பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.