ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரம் மீட்பு…. ஈராக் ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பு….

 
Published : Jul 09, 2017, 09:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரம் மீட்பு…. ஈராக் ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பு….

சுருக்கம்

mosool city rescued from is terrorists

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரம் மீட்பு…. ஈராக் ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பு….

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்றும் மொசூல் நகரம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்றும் பிரதமர் ஹைதர் அல்-அபாதி தெரிவித்துள்ளார்.

ஈராக் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல், டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த இந்த நகரை சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த  3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக் கொண்டனர்.

மேலும் மொசூல் நகரில் தங்களது இயக்கத்தினரை அதிக அளவில் குவித்தனர். சிரியாவின் சில பகுதிகளையும், ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய மொசூல் நகரையும் இணைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் அதை தனி நாடாகவும் அறிவித்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்து வந்த நிலையில் 9 லட்சம் மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஈராக் ராணுவம் கூட்டுப் படையினரின் உதவியுடன் மொசூல் நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்தது. தப்ப வழியின்றி ஐ.எஸ். பயங்கரவாதிகள் மொசூல் நகர மக்களை, மனித கேடயங்களாக பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்டனர்.  இறுதியில் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ராணுவம் முற்றிலுமாக மீட்டது.

இந்த வெற்றியை நாட்டு மக்களிடம் அறிவித்த பிரதமர் ஹைதர் அல்-அபாதி, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மொசூல் நகரம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதனிடையே ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேச தேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?
யூத சின்னம் இருந்த காருக்கு தீ வைப்பு! ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வெறுப்பு அரசியல்!