
இங்கிலாந்தில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய 21 வயது நிரம்பியவர், அழகிய பெண் குழந்தையை பெற்று எடுத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் குளூசெஸ்ட்டர்ஷைர் நகரைச் சேர்ந் பெண் பிகே. பெண்ணாக பிறந்த இவர் இளம்வயதில் தனது உடலில் ஏற்பட்ட மரபணுமாற்றத்தால், தனது உடல் ஆண் தன்மைக்கு மாறுவதை உணர்ந்தார். இதையடுத்து ஆணாக மாறிவிட தீர்மானித்தார்.
இதற்கான பிறப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்தார். அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின் மூலம், பிகேவுக்கு ரூ. 3.20 லட்சம்(4ஆயிரம் பவுண்டு) நிதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் பிகே ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த சிகிச்சைக்கு பின், பிகே தனது பெயரை ஹேடன் ராபர்ட் கிராஸ் என்று மாற்றிக் கொண்டார். தன்னை ஆணாகவே மாற்ற தொடர் சிகிச்சைகளையும் அவர் எடுத்து வந்தார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றிக் கொள்ளவில்லை. ஏறக்குறைய 3 ஆண்டுகள் சட்டப்பூர்வமாக ஆணாகவே வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், தனது கருப்பையில் வளரும் கருமுட்டைகளை கருமுட்டை சேமிப்பு வங்கியில் சேமித்து , விரும்பிய நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள கிராஸ் திட்டமிட்டு இருந்தார். ஆனால், இந்த திட்டத்துக்கு அரசு நிதி வழங்க மறுத்துவிட்டது. மேலும், இனிமேல் முழுமையாக ஆணாகி, மாறி குழந்தை பெற்றுக் கொள்வதும் இயலாத நிலையும் ஏற்பட்டது.
இதையடுத்து, பேஸ்புக், டுவிட்டர் மூலம் தனக்கு விந்தணுக்களை தானமாக வழங்க விருப்பமானவர்களை கேட்டு அனுகினார். இதில் ஒருவர் விந்தணுக்கள் தானம் தர சம்மதிக்கவே அவரின் விந்தணுக்களை கருப்பையில் செலுத்தி வெற்றிகரமாக கிராஸ் கர்ப்பமானார். இதையடுத்து, தான் கர்ப்பமடைந்து இருப்பதாக முதல்முறையாக அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 16-ந்தேதி குளூசெஸ்ட்டர்ஷைர் ராயல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை கிராஸ் பெற்று எடுத்தார். இது குறித்து டுவிட்டரில் கிராஸ் வெளியிட்ட பதிவில் “ நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் குழந்தை இப்போது மிகவும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறாள்” எனத் தெரிவித்தார்.
தற்போது, குளுசெஸ்ட்டர்ஷைர் நகரில் ஒருதுணிக்கடையில் பணிபுரிந்து வரும் கிராஸ், தனது குழந்தைக்கு ஒரு வயது ஆனபின், மீண்டும் பணிக்குச்செல்வேன். அதேசமயம் நான் ஆணாவதற்காக முயற்சிகள், சிகிச்சைகள் தொடர்ந்து நடக்கும் என்றும் தெரிவித்தார்.
உலகிலேயே பெண்ணாக இருந்து ஆணாக மாறி குழந்தை பெற்ற முதல் சம்பவம் கடந்த 2008ல் அமெரிக்காவில்நடந்தது. தாமஸ் பீட்டே என்ற பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் முதன்முதலாக குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.