1 லட்சத்து 34 ஆயிரம் உயிர்களை காவு வாங்கியது கொரோனா..! உலகம் முழுவதும் கோர தாண்டவம்..!

Published : Apr 16, 2020, 07:38 AM ISTUpdated : Apr 16, 2020, 07:40 AM IST
1 லட்சத்து 34 ஆயிரம் உயிர்களை காவு வாங்கியது கொரோனா..! உலகம் முழுவதும் கோர தாண்டவம்..!

சுருக்கம்

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 1,34,603 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 20,83,048 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 5,10,187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 14 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரையில் 6,44,089 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,206 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28,529 பலியாகி இருக்கும் நிலையில் நேற்று மட்டும் 2,482 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு தாக்குபிடிக்க முடியாமல் வல்லரசு அமெரிக்காவே நிலைகுலைந்து போயிருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

Worlds Cheapest House: வெறும் 1 டாலருக்கு ஒரு வீடு! அமெரிக்காவில் ஏன் இவ்வளவு மலிவு?
Amazon River: 6,400 கி.மீ. நீள ஆற்றில் ஒரு பாலம் கூட இல்லையா? ஆச்சரியமூட்டும் உண்மைகள்!