
பிரதமர்நரேந்திர மோடி தனது போர்ச்சுக்கல் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு வாஷிங்டன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான்கு நாள் அரசு முறை பயணமாக போர்ச்சுக்கல்,அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். நேற்று போர்ச்சுக்கல் பிரதமரை சந்தித்த மோடி இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்கா சென்று இறங்கியதும் விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை நாளை ,வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், வர்த்தகம், எரிசக்தி துறை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிறப்பு டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்பு வெள்ளை மாளிகையில் அதிபருடன் டின்னர் விருந்தில் பங்கேற்கும் முதல் உலக தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்கா வரும் பிரதமர் மோடி யை வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அரசு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய விஷயங்கள் குறித்து உண்மையான நட்பு ரீதியில் பேச இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தனது உண்மையான நண்பரை சந்திக்க இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.