இதுக்கு மட்டும் தான்...!!! - உலகின் செல்வாக்கான மனிதர் பட்டியலில் முதலிடம் பெற்றார் மோடி

 
Published : Nov 30, 2016, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
இதுக்கு மட்டும் தான்...!!!  - உலகின் செல்வாக்கான மனிதர் பட்டியலில் முதலிடம் பெற்றார் மோடி

சுருக்கம்

2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபர் யார்? என டைம் பத்திரிக்கை நடத்தி வரும் கருத்துக்கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் புகழ் பெற்ற பத்திரிகையான ‘டைம்’ 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. ஆன்-லைன் மூலம் வாசகர்கள் வாக்களித்து வரும் இந்த கருத்துக்கணிப்பில் 21 சதவீதம் வாக்குகளுடன் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார். 
மோடிக்கு அடுத்த இடத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே 10 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 7 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் 6 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக டைம் பத்திரிகை நடத்தும் போட்டியில் பிரதமர் மோடி இடம் பெற்று வருகிறார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்.பி.ஐ.) தலைவர் ஜேம்ஸ் கோமே, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைநிர்வாக அதிகாரி டிம் குக், முஸ்லிம் அமெரிக்க ராணுவ வீரரின் பெற்றோர்களான ஹுமாயுன்கான் கிசர், கஜாலா கான், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, சீன பிரதமர் ஜி ஜின்பிங் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

இதன் முடிவுகளை டைம் பத்திரிக்கை டிசம்பர் 4-ம் தேதி வெளியிடும். அதுவரையில் மோடி முதலிடத்தில் நீடிப்பாரா? இல்லை வேறு யாராவது முதலிடம் பெறுவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.2014-ம் ஆண்டின் செல்வாக்கான நபராக டைம் பத்திரிக்கை நரேந்திர மோடியைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு ரூ.3 லட்சம்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!