‘பிரிக்ஸ்’ நாடுகளிடையே வலிமையான கூட்டுறவு தேவை…பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பிரதமர் மோடி யோசனை…

First Published Sep 4, 2017, 9:04 PM IST
Highlights
modi in brikcs conference


பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வலிமையான கூட்டுறவு, ஒத்துழைப்பு இருந்தால்தான், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும். என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் மாநாடு

சீனாவின் புஜியான் மாநிலம், ஜியாமென் நகரில் 3 நாள் ‘பிரிக்ஸ்’ (பிசேில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாடு தொடங்குவதற்கு முன், ரஷிய அதிபர் விளாதிமிர்புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி இரு நாடுகளுடான நட்புறவு, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பிரிக்ஸ் மாநாட்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது-

அடித்தளம்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவுக்கு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரமே அடித்தளமாகும்.

தனி ரேட்டிங் நிறுவனம்

இந்த பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வளர்ச்சியை தீர்மானிக்கும் சர்வதேச தரம் நிறுவனங்களுக்கு பதிலாக, பிரிக்ஸ் நாடுகளுக்கு பிரத்யேகமாக தரம் வழங்கும் நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும். 

புத்தாக்கம் படைத்தல், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே வலிமையான கூட்டுறவு இருப்பது அவசியம். அதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும், வௌிப்படைத்தன்மையை ஊக்கப்படுத்தி, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய ஆதரவைப் பெற முடியும்.

மத்திய வங்கிகள்

பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அவசர கால நிதி சேமிப்பு அமைப்பு எனச் சொல்லப்படும் சி.ஆர்.ஏ. அமைப்புக்கும், சர்வதேச நிதி முனையத்துக்கு(ஐ.எம்.எப்.) இடையேயும் ஒத்துழைப்பை உருவாக்க, உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் திறனை வலிமைப்படுத்த வேண்டும்.

சூரிய சக்தி

அதுமட்டுமல்லாமல், கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் இந்தியாவும், பிரான்சும் சேர்ந்து அறிமுகப்படுத்திய சர்வதேச சோலார் கூட்டமைப்புடன்(ஐ.எஸ்.ஏ.) பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும். புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய ஒளி சக்தி பயன்பாட்டை ஊக்கப்படுத்த, வலிமைப்படுத்த உறுப்பு நாடுகளுக்கு முழுமையான திறமை இருக்கிறது.  இதற்கான நிதியை புதிய மேம்பாட்டு வங்கியிடம் இருந்து அதிகமான எதிர்பார்க்கிறோம்.

பரிமாற்றம்

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே திறன்மேம்பாடு, அதை பரிமாறிக்கொள்வதில், சிறந்த நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு, உற்பத்தி, தகவல்தொடர்பு, திறன்மேம்பாடு ஆகியவற்றை பிரிக்ஸ் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரிமாறிக் கொள்வதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

ஸ்மார்ட் சிட்டி அமைப்பது, நகரமயமாக்கல், மற்றும் பேரழிவு மேலாண்மை ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும்.

கடனுதவி

பிரிக்ஸ் நாடுகளிடையே நிலையான வளர்ச்சியும், அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான வளங்களை பரிமாறிக்கொள்ளவும், தேசிய மேம்பாட்டு வங்கி கடன் உதவி அளிக்க வேண்டும்.

இந்தியா கருப்பு பணத்தையும், ஊழலை ஒழிப்பதிலும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும திட்டத்திலும், செயல்பாட்டிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலில் நிலைத்தன்மை, நிலைமையான வளர்ச்சி, செழிப்பு ஆகியவை அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு முக்கியம். இந்த விஷயங்களை முறையாகக் கொண்டு செல்வது பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் கடமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

 

 

 

 

 

tags
click me!