Miss World 2021 : 16 அழகிகளுக்கு கொரோனா தொற்று உறுதி !! உலக அழகிப் போட்டி தள்ளிவைப்பு..

By Ganesh Ramachandran  |  First Published Dec 18, 2021, 11:21 AM IST

அமெரிக்கா அருகே உள்ள கோஸ்டா ரிகா தீவில் உலக அழகி 2021 போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் மிஸ் இந்தியா உட்பட 16 நாடுகளின் அழகிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது


2021-ம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப்போட்டி அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் தொடங்க இருந்தது. ஆனால் திடீரென இந்திய அழகியாக தேர்வாகி உலக அழகிப்போட்டிக்கு சென்ற மானஸா வாரணாசி உள்ளிட்ட 16 அழகிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டியில் பங்கேற்கச் சென்ற அனைத்து நாடுகளின் அழகிகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மானஸா வாரணாசி, மிஸ் இந்தியா அழகி

இறுதிப்போட்டி மீண்டும் அடுத்த 90 நாட்களுக்குள், போர்ட்டோ ரிக்கோவின் வேறு பகுதியில் நடத்த திட்டமிடப்படும் என்று உலக அழகிப் போட்டி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இன்று காலை 16 அழகிகளுக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் ஆலோசனையின் படி இறுதிப் போட்டியை தள்ளி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இன்னும் 90 நாட்களில் இறுதிப்போட்டி மீண்டும் நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

 

click me!