பாப் கிங் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோசப் ஜாக்சன் மரணம்….

 |  First Published Jun 28, 2018, 6:21 AM IST
Micheal Jacsons father Joseph Jacsons expired



மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தந்தை ஜோசப்  ஜாக்சன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

உலகின் மிகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோசப் ஜாக்சன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நிலையில் நேற்று சிகிசை பலனின்றி உயிரிழந்தார்.

Latest Videos

பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்ட மைக்கல் ஜாக்சன் அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பன் முகங்கள் கொண்டவர்.  இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜீன் 25-ம் தேதி உயிரிழந்தார். அதிக அளவில் மயக்க மருந்தை அவர் உட்கொண்டதால் இறந்ததாக கூறப்பட்டது.

மைக்கேல் ஜாக்சனின்  தந்தை ஜோசப் ஜாக்சன் லாஸ் வேகாஸ் நகரில் தனிமையில் வசித்து வந்தார். இவர்  ஜாக்சன் 5 பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி மைக்கேல் ஜாக்சனை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தனது மகன் மைக்கோல் ஜாக்சன் உலக அளவில் புகழ்பெற உறுதுணையாக இருந்தார்

89 வயதான ஜோசப் ஜாக்சன்  கடந்த பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. லாஸ்வேகாஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஓருவர் தெரிவித்தார்.

click me!