கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஆத்திரம்... மெக்சிகோவில் மேயரைச் சுட்டுக்கொன்ற கடத்தல் கும்பல்!

By Asianet Tamil  |  First Published Apr 9, 2020, 9:11 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், மெக்சிகோ நாட்டையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவுக்கு அருகே இருக்கும் மெக்சிகோவில் சுமார் 3 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 141 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு அமெரிக்கர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் எல்லைகளை மெக்சிகோ அரசு மூடியது.

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த மேயர் சுட்டுக்கொல்லப்பட்டார். 
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், மெக்சிகோ நாட்டையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவுக்கு அருகே இருக்கும் மெக்சிகோவில் சுமார் 3 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 141 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு அமெரிக்கர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் எல்லைகளை மெக்சிகோ அரசு மூடியது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மெக்சிகோவில் தெற்கு மெக்சிகன் பகுதியில் உள்ள மகஹூல் நகர மேயர் ஓபிட் துரோன் கோமிஸ் அந்த நகரில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், நகரில் வாகனப் போக்குவரத்து உட்பட பல சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த மேயரை போதைப் பொருள் கடத்தல் கும்பல் சுட்டுக் கொன்றுள்ளது.
 தனது காரில் வெளியில் சென்ற மேயரை, அந்த கும்பல் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இச்சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!