அமெரிக்க மருத்துவமனைகளில் பிணக் குவியல்..!! செய்வதறியாது கதறும் ட்ரம்ப்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 9, 2020, 3:28 PM IST
Highlights

ஆனால் வல்லரசு நாடான   அமெரிக்காவால் அதைச் செய்ய முடியவில்லை,  இதனால் அமெரிக்கா மனதளவிலும் மிகுந்த சோர்வடைந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது .  இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தமாக 14,795 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.  

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை எட்டியுள்ளது , இது உலக நாடுகளை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இந்நிலையில் அமெரிக்கா ,  இத்தாலி ,  பிரான்ஸ் ,  ஸ்பெயின் ஜெர்மனி ,  இங்கிலாந்து ,  ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .   மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்கா இந்த வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது .  கொரோனா  வைரஸின் மையம் என  மற்ற நாடுகள்  அமெரிக்காவை உச்சரிக்கும் வகையில் அமெரிக்காவில் வைரஸ் கொடுமை அதிகமாக உள்ளது .  இந்த வைரஸை கட்டுப்படுத்த வழிதெரியாமல் அமெரிக்க அதிபரும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் விழி பிதுங்கி நின்கின்றனர்.  

அமெரிக்காவில் கிட்டத்தட்ட நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து கடந்துள்ளது அதாவது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இன்னும் ஒருசில தினங்களில் உச்சத்தை எட்டும் என்றும் , அது உச்ச கட்டத்தை அடையும் போது நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவிட்டு நிறுவனம் எச்சரித்திருந்தது.  அதனடிப்படையில் கிட்டத்தட்ட அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 81 ஆயிரத்து 766 பேர் உயிரிழக்கக் கூடும் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இந் நிலையில் அச்சுகாதார நிறுவனம் கணித்ததை போலவே,  அங்கு உயிரிழப்புகள் திடீரென பன்மடங்காக உயரத்தொடங்கியுள்ளது.  நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில்கடந்த 24 மணி நேரத்தில்  மீண்டும்  2000 பேர் உயிரிழந்துள்ளனர் இது அமெரிக்க மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது . அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது . நேற்றுவரை 12 ஆயிரமாக இருந்த பலியானவர்கள் எண்ணிக்கை இப்போது 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது ,  உலகிலேயே அதிகம் பேரை பறிகொடுத்த நாடுகளின் பட்டியிலில்  இத்தாலி, ஸ்பெயினைத் தொடர்ந்து அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உயர்ந்துள்ளது.  இதில் ஆறுதலான ஒரே விஷயம் வைரசால் பாதிக்கப்பட்டிருந்த   22 ஆயிரத்து  891 பேர் குணமடைந்துள்ளனர்.  இந்த உயிர் கொல்லி வைரஸ் சீனாவில் தோன்றியிருந்தாலும் அங்கே அந்த வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது .  ஆனால் வல்லரசு நாடான   அமெரிக்காவால் அதைச் செய்ய முடியவில்லை,  இதனால் அமெரிக்கா மனதளவிலும் மிகுந்த சோர்வடைந்து உள்ளதை நாம் பார்க்க முடிகிறது .  இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தமாக 14,795 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.  

 

click me!