நோயில் இருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கிய கொரோனா..!! இறக்கமற்ற கொலைகாரன் என குமுறி அழும் தென் கொரியா..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 9, 2020, 2:07 PM IST

குணப்படுத்தபட்டதாக வகைப்படுத்தப்பட்ட சுமார் 51  நோயாளிகளுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . அதாவது அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டது ,


கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக  தென்கொரிய அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. தென் கொரியாவில் மத்திய நோய்த்தடுப்பு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இதுவரையில் 15 லட்சத்துக்கும் அதிகமாகமானோர் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது .  இந்நிலையில் அமெரிக்கா இத்தாலி ,  ஸ்பெயின் ,  பிரான்ஸ் ,  தென்கொரியா , போன்ற நாடுகள் இந்த வைரசுக்கு  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது ,  அதாவது இந்த வைரஸால் இருவர் தாக்கப்பட்டு குணமடைந்து விட்டால்  மீண்டும்  அவரை இந்த வைரஸ் தாக்காது என்பது தான்,அந்த ஆராய்ச்சி முடிவு .

Latest Videos

ஆனால் இந்த தகவல் குறித்து இரு வேறு மாறுபாட்ட கருத்துகள் இருந்து வருகிறது,  அதாவது இது குறித்து தெரிவித்த சீனா , நோய் தொற்றிலிருந்து  குணமடைந்தவர்களையும் இந்த வைரஸ் மீண்டும்  தாக்கக்கூடும் என தங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக  அதிர்ச்சி ஊட்டியது ,  இந்நிலையில் சீனாவின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது தென்கொரியாவும் அதே தகவலை கூறியுள்ளது. தென்கொரியாவில் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது,  இங்கு வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  10, 384, ஆக உள்ளது    சுமார் 6,776 பேர் வைரசில் இருந்து மீண்டுள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மற்ற நாடுகளை தாக்கியது போல கொரோனாவால் தென் கெரியாவில் தாக்குதல் நடத்த முடியவில்லை , காரணம் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமான கையாளப்பட்டதுதான் காரணம்,

 

சீனா கையாண்ட அதே யுக்திகளை  கையாண்டு தற்போது தென்கொரியா நோய் தாக்கத்தைக் வெகுவாக கட்டுப்படுத்தி உள்ளது இதுவரை வைரசுக்கு 200 பேர் மட்டுமே அங்கு  உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென்கொரியாவின் நோய்த் தடுப்பு மையத்தில் இயக்குனர், ஜெனரல் ஜியோங் யூன்-கியோங்,  தென்கொரியாவில் குணப்படுத்தபட்டதாக வகைப்படுத்தப்பட்ட சுமார் 51 நோயாளிகளுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  அதாவது அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டது ,  எனவே இந்த வைரஸ் பாதித்தவர்களையும் திரும்ப தாக்கக் கூடிய மோசமான வைரஸ் என்ற தகவலை நாங்கள் இதிலிருந்து தெரிந்து கொண்டுள்ளோம் என உலக நாடுகளை தென் கோரியா எச்சரித்துள்ளது.   

 

 

click me!