வெனிசுலா தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..! டிரம்பின் கனவு தகர்ந்தது..!

Published : Oct 10, 2025, 02:55 PM IST
Maria Corina Machado

சுருக்கம்

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கையை தகர்த்தெறியும் விதமாக, 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடியதால் மரியா கொரினா மச்சோடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வந்தார். இந்தியா, பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை தான் நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வந்த டிரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து வெளிப்படையாக பேசி வந்தார். டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.

டிரம்பின் கனவு தகர்ந்தது

ஆனால் இவை எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடியதால் மரியா கொரினா மச்சோடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் நோபல் பரிசு பெற வேண்டும் என்ற டிரம்பின் கனவு தகர்ந்துள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!
காசா மக்களை மறக்க முடியுமா? முதல் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் போப் லியோ உருக்கம்!