சிங்கப்பூரில் ஆண் நண்பரை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 12 கசையடி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூரில் சட்டங்கள், விதிகள் கடுமையாக இருக்கும். சட்டங்களை மீறுபவர்கள், விதிகளை மீறுபவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தனது 20 வயது ஆண் நண்பரை பாலியல் வன்கொடுமை செய்த 45 வயதான நபருக்கு 12 கசையடி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 20 வயதான இளைஞர் ஒருவரும், 45 வயதான ஜெஃப்ரி பெ என்பவரும் நண்பர்களாகியுள்ளனர். இருவருமே ஆண்கள். நண்பர்களாகி சில வாரங்களிலேயே, அவர்கள் இருவரும் இரவு நேர பப் ஒன்றில் இணைந்து மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து, 20 வயது இளைஞருக்கு சற்று மதுபோதை ஏறி விடவே, அவரை தனது வீட்டில் படுத்து உறங்குமாறு ஜெஃப்ரி பெ கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, ஜெஃப்ரி பெ-வின் வீட்டுக்கு சென்ற அந்த இளைஞர் போதையில் நன்றாக தூங்கியுள்ளார். அப்போது, மது போதையில் தூங்கிய அந்த இளைஞரை, ஜெஃப்ரி பெ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஜெஃப்ரி பெ மீதான வழக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடலின் நடுவே மீன் பண்ணைகளை அமைக்கும் சிங்கப்பூர் அரசின் டெண்டர் காலவரையின்றி ஒத்திவைப்பு!
இந்த நிலையில், ஜெஃப்ரி பெ-வை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 12 கசையடிகள் கொடுத்து, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் போது, தன் மீதான சில குற்றச்சாட்டுகளை மறுத்த ஜெஃப்ரி பெ, பாதிக்கப்பட்ட இளைஞரின் சம்மதத்தின் பேரில்தான் அது போன்ற சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இளைஞர் தனது பாலுணர்வுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும், தன் மீது காதல் வயப்பட்டதாகவும் ஜெஃப்ரி பெ விசாரணையின் போது தெரிவித்தார்.
ஆனால், ஜெஃப்ரி பெ-வின் வாதத்தை நிராகரித்த நீதிபதி மாவிஸ் சியோன், பாதிக்கப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும், எனவே, அவர் மீது ஜெஃப்ரி பெ நிகழ்த்திய பாலியல் செயல்களுக்கு அவரால் சம்மதம் தெரிவித்திருக்க இயலாது என்றும் கூறி, ஜெஃப்ரி பெ-வுக்கு 12 கசையடிகள் கொடுத்து, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.