இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் முன்வைத்த கோரிக்கையை பிரதமா் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளாா்.
இலங்கையில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனையடுத்து பொருளாதார நிலைமையை சரி செய்யாத ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
முதலில் சிங்களர் வசிக்கும் தென்னிலங்கையில் ராஜபக்சேக்களுக்கு எதிராக வெடித்த போராட்டம் தமிழர்களின் தாயக பிரதேசமாக வடக்கு கிழக்கிலும் தொடருகிறது. மேலும் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கும் அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர். மேலும் போராட்டகாரர்கள் மீது சிங்கள ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இதனால் இலங்கையில் கொந்தளிப்பான நிலை தொடர்கிறது. தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் எழுச்சிமிகு போராட்டங்களால் அரசுக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.
இதனால் இலங்கையில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டு, அதிபர் கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இதுதொடர்பாக வானொலி ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். பிரச்னைகளைக் களைய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்த அவர், ஒருவேளை அப்படியொரு அரசை அமைக்க வேண்டிய சூழல் எழுந்தால் அதுவும் தனது தலைமையில் தான் அமைய வேண்டும்.
வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொள்ள முடியாதபோது இடைக்கால அரசால் என்ன பயன் கிட்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை எனில் அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்றும் வானொலி உரையில் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நேற்று ஸ்டாலின்..இன்று அண்ணாமலை.! அமித்ஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை !