முதல்முறையாக அமெரிக்காவிலுள்ள ஒரு கல்லூரி ”போனாகிராபி” குறித்து படிப்பதற்கான புதிய பாடப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு கலவியல் குறித்தான பாடத்திட்டத்தினை வழங்கவுள்ளது. இதில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து உடலூறவு குறித்து ஆபாச திரைப்படங்களை பார்த்து, விவாதிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் எனும் அந்த கல்லூரி இந்த கல்வியாண்டில் போனாகிராபி பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்தவுள்ளது. இந்த பாடமுறை “பிலிம் 3000” எனும் திட்டத்தின் கீழ் வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த பாடப்பிரிவில் மூன்று சிறப்பம்சங்களாக இருப்பதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. பாலியல் குறித்தான பாடப்பிரிவு, பாலியல் ரீதியாக நடந்தேறும் கொடூரங்கள் குறித்து பகுப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பாக அமையும். மேலும் சமூக பிரச்சனைகளின் அடிப்படையை புரிந்துக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இனம், வர்க்கம், பாலினம் ஆகியவற்றின் பாலியல் மயமாக்கல் குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துரையாடுவதே பாடத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் குறித்து தெரிந்துக்கொள்ளுவதற்கான கலை வடிவமான ஒரு சோதனை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இந்த படிப்பு மாணவர்களை, பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவது குறித்து ஆக்கபூர்வமாக முடிவினை எடுக்க உதவும் என்று கல்லூரி நிர்வாகம் நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆபாச படங்களை ஒரு வகுப்பாக ஒன்றாக அமர்ந்து பார்ப்பது "முற்றிலும் அருவருப்பானது" என்று சில தரப்பினர் கல்லூரியின் முடிவிற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.