கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த லாரிகள்... இலங்கையில் பெரும் பதற்றம்..!

By Thiraviaraj RM  |  First Published Apr 23, 2019, 3:56 PM IST

கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பிய சிறிய வேன் ஒன்றும், லாரி ஒன்றும் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ள தகவல் இலங்கையை பீதியடைய வைத்துள்ளது. 
 


கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பிய சிறிய வேன் ஒன்றும், லாரி ஒன்றும் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ள தகவல் இலங்கையை பீதியடைய வைத்துள்ளது. 

கொழும்புவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனங்கள் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கு மேலும் போலீஸார் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். அனைத்து காவலர்களும் தயார் நிலையில் இருக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கொழும்பு துறைமுக பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

 

இலங்கையில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து தேவாலயங்கள், உணவு விடுதிகள் என மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 40 குழந்தைகள் உட்பட மித்தம் 321 பேர் பலியாகி உளோளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் நியூசிலாந்தில் மசூதிக்குள் நடைபெற்ற தாக்குதலுக்கு பலிவாங்கவே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலைஉயில் இலங்கையில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்றாவது நாளான இன்று கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பிய சிறிய வேண், ஒரு லாரியும் நுழைந்ததாக தகவல் பரவியதால் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதனால் மீண்டும் இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ளது.  

click me!