lockdown in china : சீனாவின் பொருளாதார நகரான ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று இன்னும் குறையாமல் இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,606 பேருக்கு தொற்று உறுதியானது, 11,956 பேர் அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பொருளாதார நகரான ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று இன்னும் குறையாமல் இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,606 பேருக்கு தொற்று உறுதியானது, 11,956 பேர் அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன்
சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து ஷாங்காய் நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திலிருந்து இங்கு லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 2.50 கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், உணவு, மருத்துவ உதவி, அடிப்படைவசதிகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இதற்கிடையே ஷாங்காய் நகரில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சீன அரசு களமிறக்கியுள்ளனது. லாக்டவுனிலும், கட்டாய கொரோனா பரிசோதனையிலும் மக்கள் சிக்கியிருப்பதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
உலகளவில் பாதிப்பு
இதற்கிடையே உலகளவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை உலகளவில் 51.08 கோடி பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 62.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1,125 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பல்கலைக்கழக மையம்(சிஎஸ்எஸ்இ) வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் கொரோனா பரவும், உயிரிழப்பும் அதிகரி்த்து வருகிறது.உலகளவில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 கோடியே 89 லட்சத்து9ஆயிரத்து 169ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்து 25ஆயிரத்து 58ஆகவும் இருக்கிறது.
அமெரிக்கா, இந்தியா
உலகளவில் கொரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 8 கோடியே 11 லட்சத்து 497 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 லட்சத்து 91 ஆயிரத்து 938 பேர் உயிரிழந்துள்ளனர்இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 4 கோடியே,30 லட்சத்து 62 ஆயிரத்து 569 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கோடிக்கும் அதிகம்
ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்ட நாடுகளில், பிரேசில்(3.03 கோடி), பிரான்ஸ்(2.86 கோடி), ஜெர்மனி(2.43 கோடி), பிரிட்டன்(2.21 கோடி),ரஷ்யா(1.78 கோடி) தென்கொரியா(1.70 கோடி), இத்தாலி(1.61கோடி), துருக்கி(1.50 கோடி), ஸ்பெயின்(1.18 கோடி), வியட்நாம்(1.06கோடி)
உயிரிழப்புகள்
ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் உள்ள நாடுகளில் பிரேசில்(6.53லட்சம்), இந்தியா(5.23 லட்சம்), ரஷ்யா(3.67 லட்சம்) மெக்சிகோ(3.24 லட்சம்), பெரு(2.12 லட்சம்), பிரிட்டன்(1.74 லட்சம்), இத்தாலி(1.62 லட்சம்), இந்தோனேசியா(1.56 லட்சம்), பிரான்ஸ்(1.46லட்சம்), ஈரான்(1.41லட்சம்), கொலம்பியா(1.39லட்சம்), ஜெர்மனி(1.34 லட்சம்), அர்ஜென்டினா(1.28லட்சம்), போலந்து(1.15 லட்சம்), ஸ்பெயின்(1.04 லட்சம்), தென் ஆப்பிரிக்கா(ஒருலட்சம்)