மாடியில் தொங்கிக் கொண்டு இருந்த குழந்தை... உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!

Asianet News Tamil  
Published : Jan 24, 2018, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
மாடியில் தொங்கிக் கொண்டு இருந்த குழந்தை...  உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!

சுருக்கம்

Kind hearted People Save Trapped Toddler in Chinas Hangzhou

மூன்றாவது மாடியில் குழந்தை ஒன்று தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. ஜன்னலுக்கு வெளியே வந்து சிறிய சுவற்றில் ஒட்டிக் கொண்டு போராடி இந்தக் குழந்தையை . இளைஞர் ஒருவர் காப்பாற்றியது அனைவரையும் ஆச்சர்யத்தில் நிகழ்த்தியுள்ளது.

சீனாவில் வீடுகள் மும்பையில் இருப்பது போல அங்கும் பல அடுக்கில் வீடுகள் நெருக்கமாகவும், உயரமாகவும் கட்டப்படுவது வழக்கம்.  அப்படி ஒரு வீட்டில் தான் இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. நேற்று முன்தினம் மூன்றாவது மாடியில் இருந்து ஒரு குழந்தை கீழே விழும் அளவிற்கு தொங்கி கொண்டு இருந்துள்ளது. இந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றியிருப்பது பெரும் ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் மக்கள் கூட்டம் நிறைந்த 'சே ஜியான்ங்' என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு இருந்த கட்டிடம் ஒன்றில் மூன்றாவது மாடியில் குழந்தை ஒன்று தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. ஜன்னலுக்கு வெளியே வந்து சிறிய சுவற்றில் ஒட்டிக் கொண்டு இருந்த அந்த குழந்தையை அருகில் இருக்கும் குடியிருப்பில் குழந்த தொங்கி கொண்டு இருந்ததை பார்த்த இளைஞர் ஒருவர். பக்கத்து வீட்டு பால்கனி வழியாக சென்று அந்த குழந்தையை தூக்கி இருக்கிறார். இதனால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. மக்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள். அந்த குழந்தையை தனியாக விட்டுவிட்டு சென்ற பெற்றோரை போலீசார் கண்டித்து இருக்கிறார்கள். இப்படி குழந்தையை தனியாக விட்டுச் செல்வது சீனாவில் இது பெரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்…பாரில் ஏற்பட்ட விபத்து சம்பவம்.. ஆடிப்போன காவல்துறை அதிகாரிகள்