
பேயுடன் திருமணம்..! 2 வருட சந்தோஷ வாழ்க்கை..
அயர்லாந்தில் உள்ள ஒரு பெண் காடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பேயை திருமணம் செய்து கொண்டார்.தற்போது வரை அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக பேட்டி அளித்துள்ளார்
அயர்லாந்தில் இருக்கும் 'அமாண்டா டீக்' என்ற பெண் சிறுவயதில் இருந்து கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2016ல் அவர் கரிபியன் கடல் கொள்ளையர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் 300 வருடத்திற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
எப்படி சாத்தியம்..?
கரிபியனை சேர்ந்த 'ஜாக் லார்ஜ்' என்பவர்,பேயாக வந்து அவரிடம் காதல் சொல்லி உள்ளாராம். அதனால்,அவருடைய காதலை ஏற்று பேயை திருமணம் செய்துள்ளார்.
முதலில் நண்பர்களாக இருந்தோம் பின் காதலித்தோம் என்று கூறியுள்ளார். இவர் தன் திருமணத்திற்கு நண்பர்களை எல்லாம் அழைத்து இருக்கிறார் என்றால் பாருங்களேன்
அயர்லாந்து அரசு இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொள்ளவைல்லை.மேலும் பேயுடன் நடந்த திருமணத்தை முறையாக எந்த நாடுஏற்றுகொள்ள தயாரோ அந்த நாட்டில் குடியுரிமை பெற்று வாழ தயாராக உள்ளாராம்.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது