Khalid Payenda: இவ்வளவுதான் வாழ்க்கை! முன்பு ஆப்கன் நிதிஅமைச்சர் இப்போது வாஷிங்டனில் வாடகை கார் ஓட்டுநர்

By Pothy Raj  |  First Published Mar 23, 2022, 2:41 PM IST

Khalid Payenda: ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதிஅமைச்சர், காலித் பயான்டே அந்நாட்டிலிருந்து வெளியேறி, தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உபர் வாடகைக் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.  


காலம் ஒருநபரை எப்படியெல்லாம் மாற்றுகிறது, கோடீஸ்வரரைக் கூட கூலிவேலைக்கு செல்ல வைக்க முடியும், வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற மிகப்பெரிய படிப்பினையை இந்த சம்பவம் தருகிறது.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதிஅமைச்சர், காலித் பயான்டே அந்நாட்டிலிருந்து வெளியேறி, தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உபர் வாடகைக் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.  

Tap to resize

Latest Videos

6ஆயிரம் கோடி டாலர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு 6000 கோடி அமெரிக்க டாலருக்கு பட்ஜெட் தாக்கல் செய்த காலித் தற்போது அமெரிக்காவில் தினசரி 150 டாலருக்காக பணியாற்றிவருகிறார் என்பதை நம்முடிகிறதா

ஆனால், அதுதான் உண்மை, வாழ்க்கையின் எதார்த்தம் என்பதைப் புரிந்த கடக்க வேண்டியுள்ளது.ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடிக்குள் சிக்குவதற்கு சில வாரங்களுக்கு முன், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனியுடன் ஏற்பட்ட முரண்பாடால் தனது நிதிஅமைச்சர் பதவியிலிருந்து காலித் பயான்டே விலகினார்.

கார் ஓட்டுநர்

அதன்பின் ஆப்கானிஸ்தான் தலிபான் நிர்வாகத்துக்குள் வந்ததும் அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்துக்குத் தப்பினார். நிதிஅமைச்சராக இருந்த காலித் அமெரி்க்காவுக்குப் புறப்பட்டார். இந்நிலையில் அமெரி்க்காவில் வாஷிங்டன் நகரில் வசிக்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற காலித் தற்போது உபர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மேலும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் அன்னியவிவகாரங்களுக்கான துறையில் சிறப்பு பேராசிரியராகவும் காலித் இருந்து வருகிறார். 

6 மணிநேரம் வேலை

 வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டுக்கு காலித் பயாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது “ நாள்தோறும் 6மணிநேரம் கார் ஓட்டுகிறேன் அதிலிருந்து 150 டாலர் வருமானம் கிடைக்கிறது. இது எனது குடும்பத்தைக் காப்பாற்ற உதவுகிறது. இதற்கு நான் நன்றி தெரிவி்க்கிறேன். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தது சிறிய அட்ஜஸ்மென்ட்தான்.

நானும் காரணம்

என்னுடைய குடும்பத்தைப் பாதுகாக்கவும், காப்பாற்றவும் வாய்ப்பளித்த அமெரிக்காவுக்கு நன்றி. ஆனால், அமெரிக்காவைவிட்டாலும் என்னால் எங்கும் செல்ல முடியாது. நான்இப்போது அமெரிக்காவைச் சேர்ந்தவரும் இல்லை, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் இல்லை, ஒருவிதமான வெறுமையான மனிதன். ஆப்கானிஸ்தான் ஏராளமான அசிங்கங்களை, அவமானங்களை தலிபான்களிடம் பார்த்தேன்.

நாங்கள் ஆப்கனைப் பாதுகாக்க தவறவிட்டோம். அந்தத் தோல்விக்கு நானும் ஒரு காரணம். மக்களின் துன்பத்தை காணும்போது வேதனையாக இருக்கிறது, நீயும் பொறுப்பாகிவிட்டாயே என்று என் மனது கேள்வி கேட்கிறது. ஆப்கனில் ஜனநாயகத்தையும், மனிதஉரிமைகளையும் நிலைநாட்டுவோம் எனக் கூறிய அமெரிக்கா அதிலிருந்து தவறிவிட்டது.” எனத் தெரிவித்தார்

தலிபான் பிடிக்குள் ஆப்கானிஸ்தான் சென்றபின் பல்வேறுவிதமான மனிதநேயப் பிரச்சினைகளையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது.


 

click me!