கம்போடியா கோவிலில் காரைக்கால் அம்மையாரின் சிற்பம்!

By manimegalai aFirst Published May 6, 2019, 4:28 PM IST
Highlights

63 நாயன்மார்களில் ஒருவராக கொண்டாடப்படும் காரைக்கால் அம்மையார், 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தார்.
 

63 நாயன்மார்களில் ஒருவராக கொண்டாடப்படும் காரைக்கால் அம்மையார், 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தார்.

அவரது சிலை, கம்போடியா நாட்டு கோவிலில் இருப்பது தமிழர்களையே வியப்படைய செய்துள்ளது. கம்போடியா நாட்டில் உள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு வாழ்ந்த கோயிலாக கருதப்படும், பண்டீ ஸ்ரீ கோவில், கிழக்கு கோபுரம் உள்ள வாசலில் மேல் மாடத்தில் சிவன் நடனமாடும் காட்சியின்,  அருகே காரைக்கால் அம்மையார் தனது 'பேய் உருவில்' இருப்பதை காண முடிகிறது. 

கணவரைப்பிரிந்து துறவறம் மேற்கொண்ட காரைக்கால் அம்மையார். தன்னை 'பேய்' என்று அழைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த உருவத்தில் தான் அவர் கம்போடியாவில் காட்சியளிக்கிறார். மேலும் காரைக்கால் அம்மையாரின் சிறப்பை எடுத்து கூறும் வகையில் அவருடைய கையில் மாங்கனியும் உள்ளது. தமிழ் மக்களால் கடவுளாக பார்க்கப்படும் காரைக்கால் அம்மையாரை, கம்போடியாவை சேர்ந்தவர்களும் சிறப்பிப்பதிருப்பது, பலரையும் வியப்படைய செய்துள்ளது. 


 

click me!