அடிதூள்... விண்வெளியில் கொடிநாட்ட தயாரானது இந்தியா..!! ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவு, இஸ்ரோ சிவன் அதிரடி...!!

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2019, 7:13 PM IST
Highlights

விண்கலம், மற்றும் மணிதகர்கள் பயணிக்கும் பகுதி உள்ளிட்ட ஒட்டுமொத்த ககன்யானும் அதிநவீன ஜிஎஸ்எல்வி எம்பி3 ராக்கெட்டில் ஒருங்கிணைக்கப்படும் இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது, ஏவப்பட்ட உடன் பூமியில் இருந்து 300 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூமியின் குறைந்ததூர சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடையும், பின்னர்  இந்திய விண்வெளி வீரர்கள் 5 முதல் 7 நாட்கள் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வார்கள்.  பின்னர் வீரர்கள் பூமிக்குத் திரும்புவர். அவர்கள் திரும்பும்போது பூமிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில்  வீரர்கள் இருக்கும் பகுதி விண்கலத்தில் இருந்து பிரிந்து பாராசூட் உதவியுடன் அவர்கள் அரபிக்கடலில் அதாவது குஜராத்  கடற்கரையை ஒட்டி இறங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடிப்படைப் பணிகள் நிறைவடைந்து விட்டது, அதன் அடுத்த கட்ட பணிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்ன  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன் இரண்டு சோதனையில் ஏற்பட்ட சிறு பின்னடைவையடுத்து உடனுக்குடன் இந்தியா தன் அடுத்த இலக்கை எட்டியிருப்பது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்கா ரஷ்யா சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.  இதே போன்று இந்தியாவும் 2022-க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்  திட்டத்தை செயல்படுத்தும் என கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.  இத்திட்டத்திற்கு ககன்யான் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ககன்யான் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுடன் இளம் தலைமுறைக்கு உந்துசக்தியாக அமையும் ஒரு திட்டமாகவும் கருதப்படுகிறுது.சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயில் தயாராகிவரும் இத்திட்டத்தில், ககன்யான் விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் விண்கலத்துடன் மூன்று விண்வெளி  வீரர்கள் பயணிக்கும் வகையில் விண்கள அறைகள் தயாராகி வருகிறது.  

விண்கலம், மற்றும் மணிதகர்கள் பயணிக்கும் பகுதி உள்ளிட்ட ஒட்டுமொத்த ககன்யானும் அதிநவீன ஜிஎஸ்எல்வி எம்பி3 ராக்கெட்டில் ஒருங்கிணைக்கப்படும் இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது, ஏவப்பட்ட உடன் பூமியில் இருந்து 300 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூமியின் குறைந்ததூர சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடையும், பின்னர்  இந்திய விண்வெளி வீரர்கள் 5 முதல் 7 நாட்கள் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வார்கள்.  பின்னர் வீரர்கள் பூமிக்குத் திரும்புவர். அவர்கள் திரும்பும்போது பூமிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில்  வீரர்கள் இருக்கும் பகுதி விண்கலத்தில் இருந்து பிரிந்து பாராசூட் உதவியுடன் அவர்கள் அரபிக்கடலில் அதாவது குஜராத்  கடற்கரையை ஒட்டி இறங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. 

விண்வெளி வீரர்கள் தங்கும் அரை 7 டன் எடையுள்ளதாக தயாரிக்கப்பட உள்ளது. திட்டம் முழுவதுமாக தயாரானவுடன்,  ஒன்று இரண்டு முறை ஆளில்லா விண்கலம் மூலம் சோதனை நடத்தப்படும். பின்னரே மனிதர்கள் அதில் பயணிப்பர்.   இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும் ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்த கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. 
 
click me!