பிரிட்டனில் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நபர் விரைவில் உயிரிழந்துவிடுவார் என்று கருத்தப்பட்ட நிலையில், ஆச்சரிப்படுத்தும் விதமாக அவர் முழு உடல் நலத்துடன் மீண்டு வந்துள்ளார்.
புருஷன் சாகுறதுக்கு முன்னாடியே இறுதிச்சடங்கிற்கு பிளான் போட்ட மனைவி... கடைசியா என்ன நடந்துச்சி தெரியுமா?
பிரிட்டனில் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நபர் விரைவில் உயிரிழந்துவிடுவார் என்று கருத்தப்பட்ட நிலையில், ஆச்சரிப்படுத்தும் விதமாக அவர் முழு உடல் நலத்துடன் மீண்டு வந்துள்ளார். ஜியோஃப் பிரிட்சார்ட் என்பவர் கடும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். புற்றுநோய் முற்றிப்போன நிலையில், முகம் முழுவதும் முற்றிலும் பாதிக்கப்பட்டு கடும் அவதிகளுக்கு ஆளானார். இதனால் பிரிட்டனில் நோயாளிகள் மட்டுமே தங்கும் இல்லத்திற்கு குடிபெயரும் அளவிற்கு அவரது உடல் நிலை மோசமானது.
36 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு தான் என்பதை உணர்ந்த அவரது மனைவி டினா, ஜியோஃப் பிரிட்சார்ட்டின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். தனது பாசமான தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜியோஃப்பின் 6 பிள்ளைகளும், 13 பேரப்பிள்ளைகளும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் அடுத்த நாள் காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை யாரும் நம்பவில்லை. பிள்ளைகள் வீட்டிற்கு வந்த அந்த நாள் காலையில் படுக்கையில் இருந்து எழுந்த ஜியோஃப் பிரிட்சார்ட்டின் நன்றாக குளித்து விட்டு, குடும்பத்தினருடன் நாள் முழுவதும் குதூகலமாக இருந்துள்ளார்.
இதனால் தலைகால் புரியாத அளவிற்கு சந்தோஷம் அடைந்த டினா, உடனடியாக மருத்துவர்களை அணுகியுள்ளார். அங்கு ஜியோஃப் பிரிட்சார்ட்டினை நன்கு பரிசோதித்த மருத்துவர்கள், கடந்த 8 மாதங்களாக அவருக்கு கொடுத்து வந்த கேன்சர் எதிர்ப்பு மருத்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும், கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாகவும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தனக்கு கிடைத்த மறுஜென்மத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ள 70 வயது முதியவர், இது தனக்கான புது அத்தியாயம் என மனம் நெகிழ்ந்துள்ளார். மேலும் மனைவி டினா தனக்காக வாங்கி வைத்திருந்த இறுதிச்சடங்கிற்கான ஆடையையும் பத்திரமாக எடுத்துவைத்துள்ளார். புற்றுநோயால் வாழ்க்கையை இழந்து, மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் இறுதிச்சடங்கிற்கு கூட தயாரான நிலையில், எமனை ஜஸ்ட் மீஸ்ஸில் ஏமாற்றிய ஜியோஃப் பிரிட்சார்ட்டின் கதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.