மாலியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பிரான்ஸ் வீரர்கள் 53 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மாலியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பிரான்ஸ் வீரர்கள் 53 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் மத அடிப்படையிலான தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நாசவேலைகளில் ஈடுபடும் அவர்களை ஒழித்துக்கட்ட முடியாமல் ராணுவம் திணறி வருகிறது. இந்நிலையில், மேனகா பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் நேற்று நுழைந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 53 ராணுவ வீரர்களும், பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும், அங்கு அந்நாட்டு அரசு கூடுதல் படைகளை குவித்தது. இதன்பின்பு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தாக்குதலில் முகாமில் இருந்தவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், அந்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் சமீபத்தில் நடந்துள்ள மிக பெரிய தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த மாதம் இதே போன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாலி நாட்டில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.