அமெரிக்கா நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட முடியாது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு அமெரிக்க நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என கோத்தபய ராஜபக்ஷாவின் வழக்கறிஞர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போரின் போது, கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்கா கொலை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக அமெரிக்க நீதி சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கோத்தபயா ராஜபக்ஷா மற்றும் அவரது சகோதரர் ராஜபக்ஷா உள்ளின்னோர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது இலங்கை இராணுவத்தின் அத்துமீறங்களை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுவந்த பத்திரிக்கையாளர் லசந்தா விகரமதுங்கா படுகொலை செய்யப்பட்டார். அவரது படுக்கொலைக்கு அப்போதைய பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா ராஜபக்சேதான் காரணம் என்று லசந்தாவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் லசந்தாவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கா இலங்கையில் பல முறை சட்டபோராட்டங்களை மேற்கொண்டும் கோத்தபயாவை நெருங்க முடியவில்லை . இதனால் விரக்தியடைந்த அவர் தந்தையில் மரணத்திற்கு நியாயம் கேட்டு தான் வசித்து வரும் அமெரிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தன் தந்தையும் பத்திரிக்கையாளருமான லசந்தை இலங்கை உள்நாட்டு போரின்போது இனப்படுகொலை தொடர்பாக செய்தி வெளியிட்டார் என்ற காரணத்திற்காக அவரை கோத்தபயா ராஜபக்சே கொலை செய்தார், எனவே வழக்கை விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரனை வரும் 16 ஆம் தேதி நீதிபதி மேனுவெல் ரியல் முன்னிலையில் விராரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தன்மீதான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று என்று கோத்தபய ராஜப்கஷேவின் வழக்கறிஞர் அஷோக டி. சில்வா அதே நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் மகள் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு தாக்கல் செய்துள்ள பெண் வெளிநாட்டில் வாழ்கிறார். இந்த பிரச்சனை இலங்கை தொடர்புடையது என்பதால், அமெரிக்கா நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட முடியாது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு அமெரிக்க நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என கோத்தபய ராஜபக்ஷாவின் வழக்கறிஞர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது லசந்தாவின் கொலை கோத்தபயா பாதுகாப்பு செயலாளராக இருந்த போது நடந்ததேயொழிய அந்த கொலைக்கும் கோத்தபயாவுக்கு எந்தத் தொடர்பு இல்லை என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படி இருந்தாலும் இந்த கொலை வழக்கை அமெரிக்க நீதிமன்றம் விடுவதாக தெரியவில்லை தொடர்ந்த் விசாரணை நடத்தி நிச்சயம் கோத்தபயாவை விசாரிக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. வழக்கு தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் கோத்தபய மற்றும் ராஜபக்ஷேவின் வண்டவாலதண்டவாலங்கள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது.