பிரதமர் மோடி "கடினமான வர்த்தக பேச்சு நடத்துபவர்'': ஜேடி வான்ஸ்!!

Published : May 02, 2025, 10:56 PM IST
பிரதமர் மோடி "கடினமான வர்த்தக பேச்சு நடத்துபவர்'': ஜேடி வான்ஸ்!!

சுருக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 'கடினமான வர்த்தக பேச்சுவார்த்தையாளர்' என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை "கடினமான வர்த்தக பேச்சு நடத்துபவர்" என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாராட்டியுள்ளார். 

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்தியாவுடன் விசாரனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவின் கடல் பரப்பை பாதுகாக்கும் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்வதற்கு என்று வாஷிங்டனிடம் இருந்து 131 பில்லியன் டாலர் அளவிற்கான ராணுவ ஹார்டுவேர்களை இந்தியா வாங்குகிறது. 

அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் 
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் எப்போது நட்புறவு இருந்து வருகிறது. தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று இருக்கிறார். டிரம்ப் வரிவிதிப்பு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு துணை அதிபர் ஜேடி வான்ஸ் அளித்திருக்கும் பேட்டியில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும், இதன் மூலம் அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளைத் தவிர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜப்பான், கொரியா, இந்தியாவுடன் வர்த்தக பேச்சு 
மேலும் அவர் தனது பேட்டியில், "பிரதமர் மோடி ஒரு கடினமான வர்த்தக பேச்சு நடத்துபவர்''. ஆனால் நாங்கள் அந்த உறவை மீண்டும் சமநிலைப்படுத்துவோம். இது முதல் ஒப்பந்தமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது முதல் ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஜப்பான், கொரியா, இந்தியா, சில ஐரோப்பிய நாடுகளுடன் நிச்சயமாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்," என்று வான்ஸ் கூறினார். 

வரி நிறுத்தி வைப்பு:
அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா உட்பட பல நாடுகளை இலக்காகக் கொண்ட வரிகளை ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவித்து இருந்தார். இருப்பினும், ஏப்ரல் 9 ஆம் தேதி, வர்த்தக ஒப்பந்தங்களுக்காக அமெரிக்காவை அணுகிய சுமார் 75 நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை அனுமதித்து சீனா மற்றும் ஹாங்காங் வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த இடைநிறுத்தம் ஜூலை 9 வரை தொடரும். இருந்தபோதிலும், ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அடிப்படை 10% வரி அமலில் உள்ளது, அதே போல் எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்களுக்கு 25% வரி அமலில் உள்ளது. 

இந்தியா, அமெரிக்கா 500 பில்லியன் டாலர் வர்த்தகம் 
பிரதமர் மோடி பிப்ரவரியில் மேற்கொண்டு இருந்த வாஷிங்டன் பயணத்தின்போது, ​​இந்தியாவும் அமெரிக்காவும் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலருக்கு உயர்த்துவது என்று ஒப்புக் கொண்டு இருந்தனர். அமெரிக்காவின் வர்த்தக இடைவெளியை ஈடு செய்வதற்காக பல நாடுகளின் மீதும் வரி விதிப்பது தவிர்க்க முடியாதது என்று டிரம்ப் அறிவித்து இருந்தார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?