இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு...! அதிரடி அறிவிப்பு!

By vinoth kumarFirst Published Oct 24, 2018, 11:56 AM IST
Highlights

இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. சமீப காலமாக பொதுமக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைந்து வருகிறது.

இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. சமீப காலமாக பொதுமக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைந்து வருகிறது. பொதுமக்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். அவர்களால் மறுநாள் காலை கவனத்துடன் வேலையில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தியும், வேலையும் கடும் பாதிப்பு அடைகிறது. 

இதனை தடுக்கும் நோக்கில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கிரேசி இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் ஒரு புதுவிதமான அறிவிப்பை உன்று வெளியிட்டுள்ளது. திருமணங்களை நடத்தி வைக்கும் இந்நிறுவனம் தனது ஊழியர்கள், வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்கினால், போனஸ் மற்றும் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆப் மூலம் ஊழியர்களின் தூக்கம் கணக்கிடப்படுகிறது. அதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விளக்கமளித்த அந்நிறுவன அதிகாரி கூறுகையில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களில் 92 சதவீதம் பேர் இரவில் சரியாக தூங்குவதில்லை. இதனால் அலுவலக வேலைகள் பாதிக்கின்றன. தூக்கத்தின் தேவையை உணர்த்தவே போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். சிறந்த உணவு, உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்துகிறோம், அலுவலகத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

click me!