நாசாவின் அதிநவீன தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் வானியல் தொலைநோக்கி சூரியக் குடும்பத்துக்கு வெளியே புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது.
நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி VHS 1256 b புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேகங்கள் சூழ்ந்திருக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்தில் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கான ஆகியவற்றுடன் தண்ணீரும் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றும் நாசா கூறியுள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கண்டறியப்பட்ட கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ள கிரகம் இது என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
VHS 1256 b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 40 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. VHS 1256 b கிரகத்துக்கும் அது சுற்றிவரும் நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தொலைவானது, நம் சூரியனில் இருந்து புளூட்டோ கிரகம் உள்ள தொலைவை விட நான்கு மடங்கு ஆகும்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான தெளிவான ஆதாரங்களை கண்டறிந்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கிரகத்தில் நிச்சயம் நீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனக் தெரிகிறது என்றும் நாசா சொல்கிறது.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் பிரிட்டானி மைல்ஸ் தலைமையிலான குழு, வெப் தொலைநோக்கி தரவுகளுடன் தண்ணீர், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது.
கிரகத்தின் வளிமண்டலப் பகுதியில் சிலிக்கேட் மேகங்கள் சூழ்ந்துள்ள இடத்தில், வெப்பநிலை 1,500 டிகிரி ஃபாரன்ஹீட் (830 டிகிரி செல்சியஸ்) ஆக உள்ளது. இதனால் நட்சத்திரங்களின் ஒளி கிரகத்தை எட்டவில்லை. இந்த கிரகம் உருவாகி 150 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ளன. எனவே இந்த கிரகம் மேலும் பல பில்லியன் ஆண்டுகளாக மாறிக்கொண்டே இருக்கும்.
கூகுள் சேவைகள் முடங்கின! ஜிமெயில், யூடியூப், டிரைவ் பயன்படுத்துவோருக்கு சிக்கல்