வரும் பொங்கலில் இருந்து மலேசியாவில் ஜல்லிக்கட்டு! தமிழக வீரர்கள் பங்கேற்பு!

First Published Dec 11, 2017, 1:04 PM IST
Highlights
Jallikattu in Malaysia since January 2017


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மலேசியாவில் முதன் முறையாக வரும் பொங்கல் அன்று நடத்தப்பட உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் கொண்டாடும் பொங்கள் விழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. 

கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது ஜல்லிக்கட்டுப்போட்டி. ஜனவரி, 2017-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப்போட்டி மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன் முறையாக, மலேசியால் நடத்தப்படுகிறது.

வரும் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டியில் 20 காளைகள் பங்குபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

மலேசியாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் மலேசியாவுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிகிறது.

click me!