கொரோனாவால் மொத்தமாக முடங்கிய இத்தாலி தேசம்...!! இறப்பு விகித த்தில் சீனாவை விஞ்சுமோ என அச்சம்...!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 11, 2020, 5:23 PM IST

இந்நோயின் பரவலை கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில் மற்றொரு பகுதியாக இத்தாலி முழுவதும்  உள்ள பள்ளிகள் திரையரங்குகள் உடற்பயிற்சி கூடங்கள் நீச்சல் குளங்கள் அருங்காட்சியகங்கள் ஹோட்டல் கேளிக்கை விடுதிகள் என ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளன . 


இத்தாலியில் கொரோனா வைரசுக்கு இதுவரை 631 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .  சீனாவுக்கு அடுத்தபடியாக  இத்தாலியில் தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர் , சீனாவில் தோன்றிய  கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் அதிகமான நாடுகளில்  பரவியுள்ளது ,  உலகளவில் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசை  கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.  

Latest Videos

இந்நிலையில் ஜப்பான் தென் கொரியா இத்தாலி உள்ளிட்ட நாடுகளில்   கரோனா வைரஸ்  தாக்கம் கடுமையாக இருந்தது வருகிறது .  சீனாவில்  இதுவரை 3,130 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வைரஸ் இத்தாலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . கொரோனாவை  கட்டுப்படுத்த இத்தாலி அரசு தீவிரமான முயற்சிகளில் இறங்கி உள்ளபோதிலும் ,  கடந்த திங்கட்கிழமை ஒரேநாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர் .  இத்தாலியில் சுமார் 1.6 கோடி மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துகொண்டே செல்கிறது.

 

இந்நோயின் பரவலை கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில் மற்றொரு பகுதியாக இத்தாலி முழுவதும்  உள்ள பள்ளிகள் திரையரங்குகள் உடற்பயிற்சி கூடங்கள் நீச்சல் குளங்கள் அருங்காட்சியகங்கள் ஹோட்டல் கேளிக்கை விடுதிகள் என ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளன .  அதே நேரத்தில் கொரோனா  தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு  எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது . 
 

click me!