வைரசை கட்டுபடுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்...!! கொரோனா தாய்வீட்டில் ஜம்பம் அடித்த சீன அதிபர்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2020, 2:21 PM IST
Highlights

நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் சீனாவின் ஹூபே மாகாணத்தில்  சீன அதிபர் நேற்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,   ஹூபேய்  மாகாணத்தில்  தோன்றிய கொரோனா பரவல் கணிசமாக  குறைந்துள்ளதாக கூறினார், 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஹூபே மாகாணத்தில் அதன் தாக்கம் காட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.  வைரசுக்கு அஞ்சி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருக்கிறார் என அவரை மக்கள் விமர்சித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தோன்றிய ஹூபே  மாகாணத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.   சீனாவின் வூகனில் தோன்றிய கொரோனா வைரஸ் சினாவைக் கடந்து 90 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது . இந்த வைரசுக்கு  உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4  ஆயிரத்தையும் தாண்டியுள்ளது .  இதுவரை உலக அளவில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது .  இதில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது .  ஆரம்பத்தில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்த நிலையில் தற்போது வைரஸ் தாக்கம் குறைந்ததால் .  அதில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது  சீனாவுக்கு அடுத்து இத்தாலி ,  தென்கொரியா ,  போன்ற நாடுகளில் இந்த காய்ச்சலுக்கான பாதிப்புகள் அதிக அளிவில் உள்ளது.  அதேநேரத்தில் ஈரானில் டெஹ்ரான் குவாம்  உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும் .  

நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் சீனாவின் ஹூபே மாகாணத்தில்  சீன அதிபர் நேற்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,   ஹூபேய்  மாகாணத்தில்  தோன்றிய கொரோனா பரவல் கணிசமாக  குறைந்துள்ளதாக கூறினார்,  இந்த பகுதியில் வைரஸ் கட்டுக்குள்  வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.  வைரஸ் பரவல் இன் தீவிர போக்கை குறைத்து நிலைமையை மாற்றி அமைப்பதில்  முதல் கட்ட வெற்றி அடைந்துள்ளதாக ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.  அதே நேரத்தில் கொரோனா  கண்டுபிடித்த பிறகு அறிவுறுத்தப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக அப்போது  அவர் தெரிவித்தார்.  
 

click me!