இதற்கிடையில் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் சேர்ந்த 24 பேர், பேர்,ஃபுளோரிடாவில் இரண்டு பேர் , கலிபோர்னியாவில் 3 பேர் , நியூஜெர்சி சவுத் ட கோட்டாவில் தலா ஒருவர் என அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் , வைரஸ் பார்த்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் மிகப்பெரிய மனித அழிவை ஏற்படுத்தியுள்ளது . சீனாவில் மட்டும் இந்த வைரசுக்கு 3,113 பேர் உயிரிழந்துள்ளனர் .
சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் பொது இடத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை மூடியும் , பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகிறது . நோய் தொற்று வேகமாக பரவுவதையடுத்து மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக ஆளுநர் சார்லி பேக்கர் அறிவித்துள்ளார் . இந்நிலையில் இந்த மாதத்தில் 92 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது .
இதற்கிடையில் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் சேர்ந்த 24 பேர், பேர்,ஃபுளோரிடாவில் இரண்டு பேர் , கலிபோர்னியாவில் 3 பேர் , நியூஜெர்சி சவுத் ட கோட்டாவில் தலா ஒருவர் என அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் கொரோனா தொற்றால் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பிரச்சாரக் கூட்டங்களும் முடங்கியுள்ளன . நியூயார்க்கில் தொற்று அதிகமாக உள்ள நியூ ரோச்சலில் ஒரு மைல் சுற்றளவை கட்டுப்பாட்டு பிரதேசமாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வசிக்கும் 80,000 மக்களின் நடமாட்டமும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.