இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த பத்து நாட்களாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் புகலிடமான காசா மீது அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது.
காசாவின் சில பகுதிகள் சல்லடை ஆக்கப்பட்டுள்ளது. தெற்கு காசா பகுதிக்கு இடம் பெயருமாறு வடக்கு காசா மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து, காசாவுக்கு நிறுத்தி வைத்திருந்த குடிநீரை தெற்கு காசாவுக்கு மட்டும் இஸ்ரேல் திறந்து விட்டுள்ளது. இதற்குக் காரணம், வடக்கு காசாவில் இருப்பவர்கள் தெற்கு காசாவுக்கு செல்ல வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டு இருந்ததுதான். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எவ்வாறு அமெரிக்கா அடக்கியதோ அதேபோன்று ஹமாஸ் தீவிரவாதிகளை அடக்க வேண்டும் என்று இஸ்ரேல் மற்றும் அமெரிபெரும்பாலான க்கா கூறி வருகிறது. அதற்கான செயலில் தான் இந்த இரண்டு நாடுகளும் தற்போது ஈடுபட்டுள்ளன.
இஸ்ரேல், காசா இடையிலான போரில் இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நின்றது. தற்போது ஒருபக்கம் சாய்வது பிராந்தியத்தில் பெரிய அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற புலனாய்வு செய்தியை அடுத்து அதிபர் ஜோ பைடன் நடுநிலைமை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இஸ்ரேலுக்கு செல்லவும் ஜோ பைடன் முடிவு செய்து இருந்ததாகவும், ஆனால், வெள்ளை மாளிகைக்கு கிடைத்த தகவலின்படி, வேண்டாம் என்ற முடிவை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காசாவில் நிலவும் அசாதாரண சூழல்: அவசர கூட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் குழு அழைப்பு!
காசாவில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் மற்றும் அரபு நாட்டுத் தலைவர்களின் குரலை அடுத்து காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு, இது தவறாக முடியும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், நீண்ட நாட்களுக்கு காசாவை இஸ்ரேல் கட்டுப்படுத்த முடியும் என்று தான் நம்பவில்லை என்றும், பாலஸ்தீனியர்கள் தான் அந்தப் பகுதியை ஆட்சி செய்ய வேண்டும் என்றும் காசாவின் தெற்கு பகுதிக்கு குடிநீர், மின்சாரம், உணவு வழங்கப்படும். காசாவின் நடந்தது அனைத்தும் ஹமாஸ் தீவிரவாதிகளின் செயலால் நடந்தவை. அந்த நாட்டு மக்கள் மற்றும் பாலஸ்தீன மக்களால் அல்ல என்றும் பைடன் தெரிவித்துள்ளார். மேலும், போர் விதிகளை பின்பற்றி இஸ்ரேல் செயல்படும் என்று பைடன் உறுதி அளித்துள்ளார்.
காசாவில் பெரிய அளவில் தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். பெரிய அளவில் இடம் பெயர்ந்து வருவதால் இவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை காசாவில் 2,600 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இஸ்ரேல் சென்று இருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அரபு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பிற்குப் பின்னர் இன்று மீண்டும் இஸ்ரேல் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று எகிப்து நாட்டை கேட்டுக் கொண்டு இருப்பதால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் எகிப்து அதிபர் அப்துல் பத்தா எல் சிசி சர்வதேச மாநாட்டை கூட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருக்கிறார்.
மேலும், காசா பகுதியில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க எகிப்து ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடக்கு காசாவில் இருந்து சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தெற்கு காசாவிற்கு இடம் பெயர்ந்த பின்னர் வடக்கு காசா மீது பெரிய அளவில் தரை வழி நடத்தி ஹமாஸ் தீவிரவாதிகளை அகற்ற இஸ்ரேல் முடிவு செய்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் பணியில் 10,000 இஸ்ரேல் படையினர் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இதில் விமானப் படை, கடற்படையும் இணைவார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.