அபுபக்கர் அல்-பாக்தாதியின் அக்கவை கைது செய்திருப்பது ஐஎஸ்ஐஎஸ் பற்றிய உளவுத் தகவல்களை வெளிக்கொண்டு வர வகைசெய்யும் என துருக்கி அதிகாரிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருகின்றனர். அத்துடன் பாக்தாதியின் அக்கா ராஸ்மியா கைது செய்யப்பட்டிருப்பது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையின் வெற்றிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு என்று துருக்கி அதிபர் ரிசப் தாயின் ஏர்துவானின் தகவல்தொடர்பு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி அண்மையில் கொல்லப்பட்ட நிலையில் அவரது அக்காவை கைது செய்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் இஸ்லாமியர்களின் அரசு என்று தங்களை கூறிக் கொள்ளும் அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி வடமேற்கு சிரியாவில் பதுங்கியிருந்த நிலையில் அமெரிக்க சிறப்புப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி பாக்தாதியை கொன்றனர்.
பாக்தாதியின் படுகொலை அமெரிக்காவின் மிகப்பெரிய வெற்றி என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் வெற்றியென அவர் கூறிக் கொண்டாலும் சிரியாவில் இன்னும் பல இடங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதுடன், இன்னும் அம்மக்களின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். பாக்தாதியின் மறைவையடுத்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பாக்தாதியின் அக்காவான (65) வயதான ராஸ்மியா அவாட், என்பவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபுபக்கர் அல்-பாக்தாதியின் அக்கவை கைது செய்திருப்பது ஐஎஸ்ஐஎஸ் பற்றிய உளவுத் தகவல்களை வெளிக்கொண்டு வர வகைசெய்யும் என துருக்கி அதிகாரிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருகின்றனர். அத்துடன் பாக்தாதியின் அக்கா ராஸ்மியா கைது செய்யப்பட்டிருப்பது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையின் வெற்றிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு என்று துருக்கி அதிபர் ரிசப் தாயின் ஏர்துவானின் தகவல்தொடர்பு இயக்குனர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பாக்தாதியின் அக்கா பற்றிய மேற்படி தகவல்கள் எதும் இதுவரை தெரியவில்லை. கைதான பெண்ணின் அடையாளத்தை பிபிசியும் இன்னும் உறுதி செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.