இந்தியா, சீனாவுக்கு பயங்கர ஆபத்து...!! எச்சரிக்கையாக இருங்கள் என , புதிய குண்டை போட்டு, பீதியை கிளப்பும் ஐநா மன்றம்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2019, 5:29 PM IST
Highlights

பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்ஸை தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.  நிலக்கரியை அதிக அளவில் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், புதிய அனல் மின் நிலையங்களை உருவாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம் என்றார்.
 

கடல் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு மிகப் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியா குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார்.  புவி வெப்பமயமாதலை வெகுவாக குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசியான் உச்சி  மாநாட்டில் பங்கேற்ற ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரஸ்,  அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், முன்னு கணிக்கப்பட்டதைவிட கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது என்றார். 

இதுதொடர்பாக கிளைமெட் சென்ட்ரல் எனும் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு செய்யும் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என  மேற்கோள் காட்டிய அவர்,  பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்ஸை தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.  நிலக்கரியை அதிக அளவில் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், புதிய அனல் மின் நிலையங்களை உருவாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம் என்றார். 

 2050ம் ஆண்டுக்குள் 45 சதவீதம் அளவுக்கு பூமியில் கரியமில வாயுவை கட்டுப்படுத்த வேண்டும், என்ற அவர்,  தொடர்ந்து புவி வெப்பமயமாதலால் ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம், ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது என்றார்.  தாய்லாந்தில் சுமார் 10 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது என  அவர் எச்சரித்துள்ளார். 

 

click me!