அமெரிக்க படையினரால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க படையினரால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவன் அபுபக்கர் அல் பாக்தாதி. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தீவிரவாத செயல்களின் மூலமாக அச்சுறுத்தி வந்தான். தனக்கு எதிராக செயல்படும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை மிரட்டியும் ஆடியோக்களை வெளியிட்டு வந்தான். இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்காக அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பாக்தாதி தலைமறைவாக இருந்தான். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் பரிஷா கிராமத்தில் பதுங்கி இருந்த பாக்தாதியை அமெரிக்க படைகள் கடந்த சனிக்கிழமை சுற்றி வளைத்தன. அவர்களிடம் இருந்து தப்பிக்க, தனது 3 மகன்களுடன் ரகசிய குகைக்குள் ஓடிய பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் வேகமாக துரத்தியதோடு வீரர்களும் நெருங்கி சுற்றி வளைத்தனர்.
தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த பாக்தாதி தனது மகன்களுடன், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். அதில், அவனது 3 மகன்களும், அவனும் உடல் சிதறி இறந்தனர். இதன்பின் பாக்தாதி உடலை அமெரிக்க ராணுவம் கடலில் துாக்கி வீசி அடக்கம் செய்தது.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும் அபூஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டதையும் உறுதி செய்துள்ளது. தீவிரவாத அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் குரேஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.