ஐ,எஸ்.தலைவர் அல் பாக்தாதி சுட்டுக் கொலை ! அமெரிக்க ராணுவ படையினர் அதிரடி!!

By Selvanayagam PFirst Published Oct 27, 2019, 6:35 PM IST
Highlights

அமெரிக்க ராணுவ படையினரின் தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்.
 

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.  இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.

அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 48) செயல்பட்டு வருகிறார்.

அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் அந்நாட்டு அரசுடன் இணைந்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன.  இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே இத்லிப்பில், அல் பாக்தாதி பதுங்கி இருக்கிறார் என உளவு அமைப்பின் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து அமெரிக்க ராணுவ படைகள் அந்த பகுதிக்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன.  இதில், அல் பாக்தாதி கொல்லப்பட்டு உள்ளார் என சிரிய அரசு உறுதிப்படுத்தி உள்ளதுடன் இந்த தகவலை ஈரான் அரசுக்கும் தெரிவித்து உள்ளது.

click me!