சீர்திருத்தம் கோரியும், சிலி நாட்டின் பிரதமர் பதவி விலக கோரியும் அந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்று பட்டையை கிளப்பியுள்ளனர்.
மீண்டும் சிக்கலில் சிலி... அதிபருக்கு எதிராக திரண்ட 10 லட்சம் மக்கள்.... அதிர்ந்தது சாண்டியாகோ...!
சீர்திருத்தம் கோரியும், சிலி நாட்டின் பிரதமர் பதவி விலக கோரியும் அந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்று பட்டையை கிளப்பியுள்ளனர்.
லத்தின் அமெரிக்க நாடுகளில் செல்வம் கொழிக்கும் பூமியாக சிலி நாடு உள்ளது. ஆனால் அரசின் நிர்வாக சீர்கெட்டால் மெட்ரோ ரயில், பஸ் ஆகியவற்றின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. போதாக்குறைக்கு மருத்துவம், ஓய்வூதியம், ஊதியம் ஆகியவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். ஒருவாரத்திற்கு முன்பு நடந்த போராட்டத்தில் 16 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். மக்களின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றியாக மெட்ரோ ரயில் கட்டண உயர்வு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு எப்படி மெரினாவில் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டதோ. அதேபோல சிலியிலும் போராட்டம் நடைபெற்ற சாண்டியாகோ ராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றது. அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, 20 ஆயிரத்திற்கும் மேற்படுத்தப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மீண்டும் சிக்கலில் சிக்கிய சிலி மக்கள், அன்றாட செலவுகளை கூட சமாளிக்க முடியாத அளவிற்கு திண்டாடினர்,
இந்நிலையில் அரசின் சீர்த்திருத்தங்களை எதிர்த்தும், சிலியின் பிரதமர் செபாஸ்டின் பினேரா பதவி விலக வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சாண்டியாகோவில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற்ற பேரணியில், அரசை எதிர்த்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இதனால் கதி கலங்கிப் போன சிலி நாட்டு பிரதமர் தனது டுவிட்டரில், நாட்டை அமைதியான பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். நாட்டின் நலனை நோக்கி மட்டுமே இனி அரசு செயல்படும். அவசரநிலை சட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி விரைவில் அறிவிப்போம் என பதிவிட்டுள்ளார்.